by Vignesh Perumal on | 2026-01-14 11:53 AM
திண்டுக்கல்லில் தனியார் நகை அடகு கடையில், நகையைத் திருப்பித் தருவதாகக் கூறி ரூ.80,000 பணத்தைப் பெற்று மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் நகரின் முக்கியப் பகுதியான ஸ்கீம் ரோட்டில் ஒரு தனியார் நகை அடகு கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் குமார் (23) என்பவர் வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஊழியர்களிடம், "எனது நகைகளை மற்றொரு தனியார் அடகு கடையில் 80 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளேன். அந்த நகைகளைத் திருப்புவதற்கு எனக்குப் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் அந்தப் பணத்தைக் கொடுத்தால், நான் உடனடியாக நகையைத் திருப்பி வந்து உங்கள் கடையிலேயே மீண்டும் அடகு வைத்துவிடுகிறேன்" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.குமாரின் பேச்சை நம்பிய அடகு கடை ஊழியர்கள், அவரிடம் ரூ.80,000 ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற குமார், நீண்ட நேரமாகியும் நகையுடன் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், அவர் கூறிய மற்றொறு அடகு கடைக்குச் சென்று விசாரித்தபோது, அவ்வாறு எந்த நகையும் அங்கு அடகு வைக்கப்படவில்லை என்பதும், குமார் தங்களை ஏமாற்றிப் பணத்தைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.இது குறித்துப் பாதிக்கப்பட்ட நகை அடகு கடை ஊழியர், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குமாரை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் தேடி வந்த போலீசார், இன்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் திட்டமிட்டு இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, குமாரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.இதுபோன்ற அறிமுகமில்லாத நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி, முன்பணமாகப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனப் போலீசார் வணிகர்களுக்கும், அடகு கடை உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!