| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு கலெக்டர் ரஞ்சித் சிங் பாராட்டு...!!!

by admin on | 2026-01-13 06:31 PM

Share:


அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு கலெக்டர் ரஞ்சித் சிங் பாராட்டு...!!!

தேனி மாவட்டம்  குறள் வினாடி-வினா  மற்றும் குறள் மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள . அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நூல் பரிசினை வழங்கி பாராட்டுகளை  தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.01.2026)   தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், குறள் வினாடி-வினா  மற்றும்  குறள் மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள  அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நூல் பரிசினை  வழங்கி பாராட்டுகளை  தெரிவித்தார்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024-அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பட்டது. அவ்வறிவிப்பினை செயற்படுத்திடும் வகையில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசைநிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திடுமாறு  அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில்,        திருக்குறள் கருத்துகள் அனைவரையும்  சென்றடையும் வண்ணம்  குறள் வாரவிழாவின் ஒருநிகழ்வாக 20.01.2026 அன்று திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரியில்  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி – வினா போட்டி நடைபெறவுள்ளது.   குறள் வினாடி – வினாப் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக  தேனி மாவட்டத்திலிருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் / பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத்தேர்வு (கொள்குறிவகை) 09.01.2026 அன்று  உத்தமாபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.  

இத்தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 30 நபர்களில் முதல் 9 நபர்கள்  3 நபர் கொண்ட   3 குழுக்களாக  குறள் வினாடி-வினாப் போட்டியிலும் ஏனைய 21  நபர்கள்  குறள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்வுபெற்றுள்ள அரசுப்பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நூல் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.    

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மற்றும் குறள் வாரம் நிகழ்ச்சியின் தொடர்பு அலுவலர் திரு.மு.கதிர்வேல், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.க.பாப்பாலட்சுமி மற்றும் பணியாளர்கள் உட்பட பலர்  உடனிருந்தனர்.


தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244            

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment