by admin on | 2026-01-13 04:00 PM
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (13.01.2026) மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்துத் தொழில்களுக்கும், அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும், பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராஜகுமார், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!