மஞ்சளார் அணை - பாசனத்திற்கு தண்ணீர் திறந்த தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ;
by satheesh on |
2026-01-13 01:58 PM
Share:
Link copied to clipboard!
மஞ்சளார் அணையிலிருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் பயன்பெறும் வகையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தண்ணீர் திறந்து
தேனி ; பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சளார் அணைக்கு தலையாறு ( எலிவால் அருவி ) இருட்டாறு மூளையாறு வரட்டாறு ஆகிய நீர்வீழ்ச்சி பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் மஞ்சளார் அணையில் தேக்கி வைக்க பட்டுள்ளது அணையின் முழு கொள்ளளவான 57 அடி உள்ளது இந்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 50. 90 அடியாக உள்ளது இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீருக்காக இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர் இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி ஜி கள்ளிப்பட்டி மற்றும் அதை சுற்று வட்டார பகுதிகளும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பயன்பெறும் வகையில் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதில் இன்று முதல் மஞ்சளார் அணையில் இருந்து இன்று முதல் 5 நாட்களுக்கு 200 கன அடி வீதம் அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்
மஞ்சளார் அணையின் நீர் தேக்கம் 57 கன அடியாக நிரம்பியதும் திண்டுக்கல் தேனி விவசாய பாசனத்திற்காக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது