by Vignesh Perumal on | 2026-01-13 01:19 PM
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தென்காசி வந்தடையும். இன்று (ஜனவரி 13) இரவு 11.50 மணிக்கு புறப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயிலில் கீழ்க்கண்டவாறு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8, முன்பதிவில்லா 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன. படுக்கை வசதி மட்டுமின்றி, கடைசி நேரத்தில் பயணம் செய்பவர்களுக்காக 8 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பது தென்மாவட்ட மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
இந்தச் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் வழியாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவோ பயணிகள் தங்களது பயணத்தைச் சீட்டுக்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பொங்கல் விடுமுறைக்குச் செல்ல ரயில் கிடைக்காமல் தவித்த பயணிகளுக்கு, கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு ரயில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!