by satheesh on | 2026-01-11 02:25 PM
டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின விழாவை முன்னிட்டு, விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் போது பறவைகள் விமானங்களில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லி அரசு புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, டெல்லி அரசின் வனவிலங்குத் துறை சார்பில் “இறைச்சி வீசும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் இருந்து கழுகு உள்ளிட்ட பெரிய பறவைகளை நகரத்துக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு அவற்றை திசைதிருப்பும் நோக்கில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, நகரின் வெளிப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் இறைச்சிகள் வீசப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக மொத்தமாக 1,275 கிலோ எலும்பில்லாத கோழி இறைச்சி வாங்கப்பட உள்ளதாகவும், இதற்கு சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என்றும் கூறப்படுகிறது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!