by admin on | 2026-01-11 11:59 AM
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், மத்திய அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் தீவுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இன்று 11.01.2026 தேதி காலை 8 மணிக்கு கடலூர் மாவட்டம் சிங்காரத்தோப்பு கடற்கரை கிராமத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கடலூர் கடலோர பாதுகாப்பு பிரிவு மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அக்கரை கோரி கிராம கடற்கரையிலிருந்து சிங்காரத்தோப்பு கிராம கடற்கரை வரை என்.சி.சி. மாணவர்கள், மீனவ ஊர்காவல் படை மற்றும் காவல்துறை காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் தொடர் நிகழ்ச்சியாக சிங்காரத்தோப்பு கிராம கடற்கரையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் கடலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ் இனியன்,கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் திருமதி. பத்மா, கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு கதிரவன், மற்றும் உதவி ஆய்வாளர் பிரபாகரன், இந்திய கப்பற்படை, இந்திய கடலோர காவல் படை, மீன்வளத்துறை வனத்துறை, ஆகிய துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் சோனாகுப்பம், சிங்காரத்தோப்பு அக்கரை கோரி கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!