by admin on | 2026-01-11 11:27 AM
போதுமான மின் இணைப்பு இல்லாததால் குமுளி பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ள கழிப்பறை, ஓய்வறை, வணிக வளாகங்கள் ....!!!பயணிகள் ; பணியாளர்கள் அவதி
தேனி மாவட்டம் குமுளியில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு தேவையான அளவு திறன் கொண்ட மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால்,பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறை ஓய்வறை,பாலூட்டும் அறை உள்ளிட்டவை பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளும் திறக்காமல் உள்ளது. பேருந்து நிலையத்தில் தற்போது பேருந்துகள் நின்று செல்லும் பேருந்து நிறுத்தமாக மட்டுமே உள்ளதால் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகளும், போக்குவரத்து ஊழியர்களும், பணியாளர்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலைய முழு பயன்பாட்டுக்கு தேவையான திறன் கொண்ட மின் இணைப்பு பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதிக போக்குவரத்து உள்ள இரு மாநில எல்லையான குமுளியில் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வண்ணம் தமிழ்நாடு அரசு அங்கிருந்த பணிமனையை லோயர் கேம்ப்பிற்கு மாற்றிவிட்டு, 18 வணிக வளாக கட்டிடங்கள், 11 பயணியர் தங்கும் அறைகள், பேருந்து நிறுத்தம் , கழிப்பறை, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், சிறிய அளவிலான பேருந்து பணிமனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் கடந்த 2023 செப்டம்பர் மாதம் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கி ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த டிச.18-ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே அங்கிருந்த பணிமனைக்கு பெறப்பட்ட மின் இணைப்பு 5 கிலோ வாட் திறன் மட்டும் கொண்டதால், புதிய பேருந்து நிலையத்துக்கு பயன்படுத்த அது போதுமானதாக இல்லை. இதனால் தற்போதுள்ள மின் அளவை பயன்படுத்தி பேருந்து நிலையத்திலுள்ள அனைத்து பயன்பாட்டிற்கும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை,பாலூட்டும் அறை,பயணியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வறைகள்,வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஆகியவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட முடியாத நிலையில் உள்ளது.
புதிய பேருந்து நிலையத்திற்கு தற்போது உள்ள குறைந்த அளவு திறன் கொண்ட மின் அளவு போதுமானதாக இல்லை என்பதால்,முன்னரே கூடுதல் திறன் கொண்ட மின் இணைப்பு பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் டிரான்ஸ்பாரம், மின் இணைப்பு செல்லும் பகுதிகள் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் மின் இணைப்பு பெறுவதற் வனத்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. அதற்காக விண்ணப்பித்தும் பல மாதங்கள் கடந்த நிலையிலும் வனத்துறையிடமிருந்து இன்னும் புதிய மின் இணைப்புக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இருக்கக்கூடிய மின் அளவை கணக்கிட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள விளக்குகள் மற்றும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு இல்லாததால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அடிப்படை தேவைகளுக்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு சிலர் பேருந்து நிலையத்தின் ஓரமான பகுதிகளில் சிறுநீர் கழித்து ஒரே துர்நாற்றமாக மாறி வருகிறது. மேலும் ஓய்வரை இல்லாததால் பேருந்து ஊழியர்களும்,நிலைய பணியாளர்களும் பேருந்துகளிலும்,திறந்த வெளியிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளும் திறக்கப்படாததால் வருவாய் இழப்போடு பயன்பாடு அற்றும் உள்ளது. மொத்தத்தில் புதிய பேருந்து நிலையம் எல்லா வசதிகளுடன் திறக்கப்பட்டும். பயன்பாட்டுக்கு தேவையான அளவு உரியமின் இணைப்பு இல்லாததால் பேருந்து நிறுத்தமாக மட்டுமே இயங்கி வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!