by satheesh on | 2026-01-10 06:24 PM
போலி இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக ஆபாச சாட்டிங் , ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது... சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை ;
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அறிமுகமில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட whatsapp நம்பர்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், போலி instagram ஐடியில் இருந்து அப்பெண் பேசுவது போன்று பிற நபர்களிடம் ஆபாச சாட்டிங் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி தனக்கு களங்கம் ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள். உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில், ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் அவர்கள் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச சேட்டிங் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி இளம் பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய பைங்குளம், விளைவீட்டுவிளை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் அருள் லிங்கம்(43) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் . சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்து சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர் ; zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !