by admin on | 2026-01-09 03:44 PM
தனியார் விடுதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் போதை விருந்து... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோகுலகிருஷ்ணன் மீது குண்டர் சட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் நடவடிக்கை
கடந்த டிசம்பர் மாதம் அஞ்சு கிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தியன் ஹெமிரிட்டெஜ் தனியார் விடுதியில் நடந்த பிறந்தநாள் விழா போதை விருந்து நிகழ்ச்சி சம்பந்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குலசேகரம், அருவிக்கரை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (34) உட்பட எட்டு பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள்* உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் *திருமதி. அழகுமீனா IAS* அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். அவ்வுதரவின்படி கோகுல் கிருஷ்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.போதை பொருட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிரபடுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!