| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பொங்கல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்த கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!!

by admin on | 2026-01-08 03:11 PM

Share:


பொங்கல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்த கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!!

தேனி மாவட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும்   வகையில்  அனைத்து  அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கு  ரூ.3000/-  ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில்  அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3000/- ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, இன்று (08.01.2026) தேனி மாவட்டம்,  தேனி அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா  ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு                   முழு கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்கத்தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார்கள். 



இந்நிகழ்ச்சியில்  தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல்வேறு  முத்தான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 

   அந்தவகையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில்  கரும்பு கொள்முதலுக்கு ரூ.1.63 கோடியும், தகுதியுள்ள 430825 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000/- வீதம் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.129.24  கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கத்தொகையும் பெற்று  மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட தைப்பொங்கல் திருநாள்               நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என  தேனி பாராளுமன்ற உறுப்ப    திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது, 

 இந்தியா முழுவதும் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்கள், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாக சிறப்பாக கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக தலா  ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000/- ரொக்கம் மற்றும்  இலவச வேஷ்டி சேலைகளை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில்,  தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், சுய உதவி குழுக்கள், மகளிரால் நடத்தப்படும்  நியாயவிலைக்கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் நியாய விலைக      இன்று (08.01.2026) முதல்  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலமாக   டோக்கன்   விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

தேனி  மாவட்டத்தில் செயல்பட்டு வரும்   517  நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 430825 குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.3000/- ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ளலாம், அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்  என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர்(பொ) திரு.க.வாஞ்சிநாதன், தேனி-அல்லிநகரம் நகர்மன்றத்தலைவர் திருமதி ரேணுப்பிரியா பாலமுருகன், பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்றத்தலைவர் திரு.மிதுன் சக்கரவர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)        திருமதி இரா.வளர்மதி, கூட்டுறவுச்சங்கங்களின் துணைப்பதிவாளர் திரு.செல்வராஜீ   வட்டாட்சியர் (தேனி) திரு.சதீஸ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர் 9842337244.. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment