by satheesh on | 2026-01-08 02:39 PM
*? கூட்டணி ஆட்சி நடக்காது என்று எப்படி சொல்ல முடியும் . திமுகவும் சரி, அதிமுகவும் சரி தனித்து ஆட்சியில் அமரும் அளவுக்கு இன்று வலுவோடு இல்லை. அமித்ஷாவின் பேச்சில் குறிப்பிடத்தக்க அமசம், 2026ல் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்பதுதான். எடப்பாடி தலைமையிலான ஆட்சி என்று கூட அவர் சொல்லவில்லை. என்.டி.ஏ. ஆட்சி என்றே இருமுறையும் கூறினார். 'அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி எத்தனை முறை சொன்னாலும், அமித்ஷா, முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஹிந்தியில் அவர் கூறியதற்கு நேரடி அர்த்தம் நமக்குப் புரியாவிட்டாலும், பாஜக பங்கு பெறும் ஆட்சி என்பதையே அவரது குரலும் உடல் மொழியும் தெளிவு படுத்தின. அவர் இறுதி வரை தன் நிலையை விட்டுக் கொடுப்பார் என்று தோன்றவில்லை. அமித்ஷாவின் இந்த நிலைப்பாடு புரிந்தே, கூட்டத்தில் அவர் முன்னால் எப்படி மறுப்பது என்ற சங்கடத்தில் எடப்பாடி அன்றைய கூட்டத்துக்கு செல்லாமல் இருந்திருக்கலாம். எடப்பாடி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது.திமுகவிலும் இதே போன்ற நிலைதான். பிரவீன் சக்கரவர்த்தியும் மாணிக்கம் தாகூரும் ஆட்சியில் பங்கு என்பதை தங்கள் சொந்தக் கருத்தாக மட்டுமே கூறியிருக்க முடியாது. அப்படியிருந்தால், திமுகவின் விரோதம் எதற்கு என்ற பயத்தில் மறுநாளே ' நான் அப்படிக் கூறவில்லை. தவறாக வெளியிடப்பட்டு விட்டது ' என்று மழுப்பியிருப்பார்கள். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அது ராகுல், பிரியங்கா போன்றவர்களின் கருத்தாக இருக்கவே வாய்ப்புள்ளது. எப்படியும் திமுகவை கூட்டணி ஆட்சிக்கும் அதிக இடங்களுக்கும் சம்மதிக்க வைக்கும் யுக்தியாகவே அது தெரிகிறது. திமுகவின் பலவீன நிலையைப் புரிந்தே காங்கிரஸின் குரல் சத்தமாகக் கேட்கிறது. பாஜகவும் காங்கிரஸும் இந்த நிலையில் இறுதி வரை உறுதியாக இருக்கும் என்பதை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை. திமுகவும் அதிமுகவும் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 180 இடங்களிலாவது நிற்க வேண்டும். ( அப்படியும் தனிமெஜாரிட்டி கிடைக்கும் வாய்ப்பு குறைவு) அவ்வளவு இடங்களில் நிற்க கூட்டணிக் கட்சிகள் விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம். இது வரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக எப்போதும் அப்படி நடக்காது என்று எப்படி சொல்ல முடியும்? எனவே, ஆட்சி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இனி திமுகவும் அதிமுகவும் நினைக்க முடியாது. யார் கண்டது? விஜய் ஆதரவோடு கூட கூட்டணி ஆட்சி அமையலாம்.
– துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!