by admin on | 2026-01-08 04:34 AM
தேனி மாவட்டம்.
மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர் வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்bவிழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!