by admin on | 2026-01-07 07:54 PM
இந்திய வெளியுறவுக் கொள்கையில் தோல்வி முகம்...?????
ஜெய்சங்கர் ராஜதந்திரத்தில் தோற்று விட்டாரா?*
வங்க தேச நாட்டில் முற்றிலுமாக நிலைமை மாறிவிட்டது.
இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அந்நாட்டின் பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹைசீனாவை தூக்கி எறிந்து விட்டு முற்றிலும் இந்தியாவுக்கு எதிராக வங்க தேச நாடும், நாட்டு மக்களும் திரும்பியுள்ளனர். இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்று கூறப்பட்டாலும் இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு தோல்வி தானே
இந்தியா ராஜதந்திர ரீதியாக என்ன செய்து இருக்க வேண்டும்?
பாகிஸ்தான் - வங்கதேச பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் நாட்டு இராணுவம் மற்றும் அரசு வங்கதேச மக்களை கொடுமைப்படுத்தி நிகழ்ச்சிகளை,நிகழ்வுகளை,விஷயங்களை உருது,இந்தி,வங்க மொழி,ஆங்கிலம், அரேபிய மொழியில் வீடியோ, பதிவு,இமேஜ் தயாரித்து வங்கதேசம் முழுக்க இந்தியா சமூகவலைதளம் மூலம் பரப்பி விட்டு இருக்க வேண்டும்.
தற்பொழுது GenZ தலைமுறைக்கு வங்கதேச விடுதலை குறித்தோ,பாகிஸ்தான் அட்டூழியம் குறித்தோ தெரியாது. அதை இந்தியா தனது சமூகவலைதள Propaganda மூலம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும் இந்தியா சார்பில் சர்வதேச பத்திரிக்கையாளர், Social Media Influencers மூலம் 1971 போரின் நினைவுகளை வங்கதேச இளைஞர்களின் அறிவுக்கு எட்டு அளவுக்கு செய்து இருக்க வேண்டும். அதே போல் 1971 - முதல் தற்பொழுது வரை Official ஆக வங்கதேசத்திற்கு மழை,வெள்ளம்,பஞ்சம், மருத்துவ உதவி என இந்தியா செய்து கொடுத்த ஒவ்வொரு திட்டங்களையும், உதவிகளையும் அதன் ரூபாய் மதிப்புகளையும் எடுத்துக்கூறி சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருக்க வேண்டும் இந்தியா எத்தனை பெரிய உதவிகளை வங்கதேச நாட்டிற்கு செய்துள்ளது என்பதை தற்போதைய வங்கதேச இளைஞர்களுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டுமா? இல்லையா?
இதையெல்லாம் ஆங்கிலம்,இந்தி,உருது, அரேபி,வங்க மொழி ஆகிய மொழிகளில் செய்து இருக்க வேண்டுமா? இல்லையா? ஷேக் ஹைசீனாவை பாதுகாத்து வைத்து கொண்டால் இந்தியாவுக்கு என்ன பயன்? வங்கதேச அரசியல் நிலைமையே மாறிய பின் ஷேக் ஹைசீனாவை மட்டும் பாதுகாத்து வைப்பதில் இந்தியாவுக்கு என்ன லாபம்? இப்படி எதுவுமே செய்யாமல் நன்றிகெட்ட வங்கதேசம் என இந்தியாவுக்குள் மட்டும் புழம்பி கொண்டு இருந்தால் என்ன பயன்?இந்துக்கள் வங்கதேசத்தில் கொல்லப்படுவதை, துன்புறத்தப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறோம் வங்கதேச விஷயத்தில் இந்தியாவின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திரங்கள் என எதுவுமே இல்லை,தோல்வி என்று தானே தற்பொழுது கூற முடியும்
பத்திரிகையாளர் அய்யனார் என்ற கார்த்தி சங்கர்* 9629908758
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!