| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

திண்டுக்கல்லுக்கு ஸ்டாலின் வருகை - மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு :

by satheesh on | 2026-01-07 07:00 PM

Share:


திண்டுக்கல்லுக்கு ஸ்டாலின் வருகை  - மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு  :

திண்டுக்கல் ; திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு  வருகை தந்த தமிழக முதலமைச்சரை திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரத்திலும், பின்னர் கலெக்டர் அலுவலக ரோட்டிலும் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தது உரையாற்றினார்.


திண்டுக்கல் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்தடைந்தார் தமிழக முதல்வர், திண்டுக்கல்லில் முதல்நிகழ்வாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 61 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர்தொடங்கி வைத்தார்.. 38 நகர்ப்புற பகுதி பேருந்துகளையும், ராமேஸ்வரம், நாகர்கோவில், திருச்செந்தூர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணிக்கும் வகையில் 23 புறநகர் பேருந்துகளையும் தொடங்கி வைத்தார். நத்தம் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 18.25 கோடி நிதி ஒதுக்கீடு


திண்டுக்கல்லுக்கு புதிய 8 அறிவிப்புகள் ; திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்  . பழைய பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும. பழனி தண்டாயுதபாணி கோவிலில் புனித திருத்தலங்களான இடும்பன்குளம், சண்முகாநதி ரூ.6 கோடி செலவில் மேம்படுத்தப்படும் . புதிதாக தொடங்கப்பட்டுள்ள நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் . ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படும். கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.கண்வழிக்கிழங்கு பயிருக்கு நிலையான நியாயமான விலை கிடைக்க மத்திய அரசிடம் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் . ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அதிகமாக மக்கள் இருக்கும் பகுதியில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என அறிவிப்பு. அதிமுகவின் 10 ஆண்டுகளை விட திமுகவின் நான்கரை ஆண்டுகளில் நெல் கொள்முதலில் மிகப்பெரிய சாதனை  திண்டுக்கல்லில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஐ பெரியசாமி சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment