by satheesh on | 2026-01-07 06:15 PM
"ஜனநாயகன்' 'திரைப்படம் தணிக்கைச் சான்று வழக்கில் 9ஆம் தேதி காலை தீர்ப்பு ; இரு தரப்பு வாதம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்; பெரும்பான்மை இல்லாவிட்டாலமட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும்; ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பு வாதம். படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர்; அதன் பின்னர் தனிப்பட்ட புகார் அளிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வாதம். இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை; எங்கள் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது - சென்சார் போர்டு. மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது; விரைவில் மறு ஆய்வு செய்யப்படும் - சென்சார் போர்டு.. சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது - சென்சார் போர்டு புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர்தான்; U/A சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? - நீதிபதி கேள்வி பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் - தணிக்கை வாரியம். எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல - நீதிபதி. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது - சென்சார் போர்டு திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் - சென்சார் போர்டு தரப்பு.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, படம் ரிலீஸ் தேதியான ஜன.9ம் தேதி காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
செய்தியாளர் ;N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !