| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ மகாராஜா....!!!!

by admin on | 2026-01-07 06:10 PM

Share:


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ மகாராஜா....!!!!

மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில்


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மகாராஜன் எம். எல்.ஏ. தலைமை தங்கி மாணவ- மாணவிகளுக்கு  சைக்கிள்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைசிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஆகியவை உங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்கப் பேருதவியாக இருக்கும். அதுமட்டுமன்றி, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அறிவு சார்ந்த சமூகம் மட்டுமே உலகை ஆளும் என்பதால் கல்வியால் மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என உரையாற்றினார்.விழாவில் தி.மு.க கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி மாடசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பிரபாகரன் ஸ்டீபன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்....


 தாலுகா நிருபர்  க. மீனாட்சிசுந்தர். தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment