| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

திமுக ஆட்சியில் ஊழல் - ஆளுநரிடம் எடப்பாடி மனு ;

by satheesh on | 2026-01-07 09:18 AM

Share:


திமுக ஆட்சியில் ஊழல் - ஆளுநரிடம் எடப்பாடி மனு ;

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சந்தித்தார்.
அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு*திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்?*

*இபிஎஸ் வெளியிட்ட பட்டியல்!*

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி, ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி, சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ.60,000 கோடி, எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி, டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி, பத்திரப் பதிவுத் துறை ரூ. 20,000 கோடி, நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி, நீர்வள ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி, சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி, தொழில்துறையில் ரூ.8,000 கோடி, பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி, மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி, வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி, சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி, உயர்க்கல்வித் துறையில் ரூ.1,500 கோடி, இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.1,000 கோடி, ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி, சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி, சிறைத் துறையில் ரூ.250 கோடி, பால்வளத் துறையில் ரூ. 250 கோடி, மொத்த ஊழல் ரூ. 4 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment