by admin on | 2026-01-06 05:54 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குவழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முழுக்கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்
தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முழுக்கரும்புகளை கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டும், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றுக்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17,959 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசாக ரூ.3000/- வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உள்ள 517 நியாய விலைக்கடைகள் மூலமாக 430825 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நேற்று முதல் (05.01.2026) தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி நர்மதா, இணை இயக்குநர் வேளாண்மை திருமதி மா.சாந்தாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி வளர்மதி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!