| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

நல்லோசை- களமாடு 2026...!!!! கலெக்டர் ரஞ்சித் சிங் பரிசளிப்பு...!!!

by admin on | 2026-01-06 04:28 PM

Share:


நல்லோசை- களமாடு 2026...!!!! கலெக்டர் ரஞ்சித் சிங் பரிசளிப்பு...!!!

தேனி மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நீதி   கல்லூரி விடுதிகளில் தங்கிப்  பயிலும்,    மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடு  2026 ” எனும்   பல்திறன் விளையாட்டுப்  போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்    கேடயங்கள்  மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (06.01.2026) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்பட்டு வரும்  சமூக நீதி   கல்லூரி விடுதிகளில் தங்கிப்  பயிலும்,   மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடு 2026 ” எனும் பல்திறன் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற  7 கல்லூரிகளைச் சேர்ந்த 90 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்    கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை  வழங்கி,  வாழ்த்துகளை தெரிவித்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,மாணவர்கள்  கல்வி பயில  உடல்  ஆரோக்கியமும்,  மன ஆரோக்கியமும்  மிக முக்கியமானதாகும்.   மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு  நான்முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது  அந்தவகையில், நல்லோசை – களமாடு பல்திறன் விளையாட்டுப் போட்டிகளும்    மிகவும் முக்கியத்துவமானதாக கருத்தப்படுகிறது.  மாணவர்களின்  கல்வித்திறனோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்  வகையில்   பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கேரம் போர்டு, பேட்மிட்டன், சதுரங்கம், ஓவியப்போட்டி  உள்ளிட்ட  பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.  மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புக்களை  நன்முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்(பொ) திரு.நல்லையா மற்றும் விடுதி காப்பாளர்கள், மாணவ/மாணவியர்கள்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment