by admin on | 2026-01-05 07:41 PM
தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 241 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், 2 பயனாளிகளுக்கு ஊன்றுகோல்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, REC நிறுவனத்தின் நிதி உதவியோடு, இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் அடங்கிய மருத்துவக்குழு அத்தியாவசிய மருத்துவப்பொருட்களுடன், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவச் சேவை வழங்கிடும் பொருட்டு, நடமாடும் மருத்துவச்சேவை வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், உதவிக்காவல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிவன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.பஞ்சாபகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.கதிர்வேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!