by Vignesh Perumal on | 2026-01-05 04:23 PM
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
புதன்கிழமை அன்று திண்டுக்கல் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முடிவுற்ற அரசுப் பணிகளைத் திறந்து வைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டி வைக்கிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பூ.நா. சரவணன் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
வரும் ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கக் கூடாது.
இந்தத் தடையை மீறி யாரேனும் ட்ரோன்களைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!