by Vignesh Perumal on | 2026-01-05 09:23 AM
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அரிசி உற்பத்தியில் சீனாவிடமிருந்த முதலிடத்தை இந்தியா தட்டிப்பறித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது இந்திய விவசாய வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகிறது.
இந்தியா இந்த ஆண்டு 15.018 கோடி டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த சீனாவின் உற்பத்தி இந்த ஆண்டு 14.528 கோடி டன்னாக சரிந்துள்ளது. உலகளாவிய மொத்த அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தச் சாதனையைத் தக்கவைக்க, 25 வகையான பயிர்களில் 184 புதிய உயர்தர மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் விதை ரகங்களை மத்திய அமைச்சர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், ஈரோட்டில் இன்று (ஜனவரி 5, 2026) பிரம்மாண்டமான விவசாயிகள் விழிப்புணர்வு மாநில மாநாடு நடைபெறுகிறது.
ஈரோடு மஞ்சள் ஏல விற்பனை மையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் அமைச்சர், அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார். ஈரோட்டின் அடையாளமான மஞ்சள் சாகுபடிப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்.
மாநாட்டுத் திடலில் சுமார் 125 அரங்குகள் கொண்ட பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கை விவசாயம், நவீன இயந்திரங்கள் மற்றும் வங்கி கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
"இந்தியா இன்று உணவுப் பற்றாக்குறை உள்ள நாட்டிலிருந்து, உலகிற்கு உணவளிக்கும் நாடாக மாறியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடி அரசின் இலக்கு."
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி ₹4,50,840 கோடி என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. இதில் அரிசி ஏற்றுமதி மூலம் மட்டுமே சுமார் ₹1,05,720 கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!