by admin on | 2026-01-03 07:54 PM
பள்ளி மாணவிக்கு செருப்படி....!!! பள்ளி மாணவி தற்கொலை...!!
கன்னியாகுமரி அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த தான் 40 வயதுடைய விஜயலட்சுமி. இவரது மகள் அதே பகுதியி உள்ள அரசுபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த .இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவரது காதலனாக கூறப்படும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரதீப் (21) என்பவரும் மாணவி இறந்த துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார், இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் தங்கள் மகளை தற்கொலைக்கு தூண்டிய பக்கத்துவீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது தனது மகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி அன்று மாலை பள்ளி முடிந்து பக்கத்து வீட்டுக்காரர் பொண்ணு ராஜன் என்பவரது ஆட்டோவில் அவர்கள் மகனுடன் தனது மகளும் வீட்டிற்கு வந்து இறங்கினார். இந்நிலையில் அவர்களது இரு மகள்கள் மற்றும் ஆட்டோக்காரர் பொண்ணுராஜனின் மனைவி சந்திராவும் எங்களின் ஆட்டோவில் எப்படி நீங்கள் ஏறலாம்’ என கூறி தகாத வார்த்தைகளால் பேசி ஊர் மக்கள் முன்னிலையில் செருப்பாலும் கட்டையாலும் அடித்து அவமானப்படுத்தினர்.இதை தட்டிக் கேட்க சென்ற தன்னையும் அடித்தனர் . இதனால் மனமுடைந்த எனது மகள் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் ஆட்டோக்காரரின் மகள் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் எனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள், எனவே எனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர்
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!