by admin on | 2026-01-03 07:00 PM
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர்களை குற்றப்பிரிவு போலீசார் கேரளாவில் கைது செய்தனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மங்காவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மனைவி அருந்ததியிடம் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீ சத்தியபாமா ரெசிடென்சியல் சென்ட்ரல் ஸ்கூலில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 250,000/- பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர்.மேற்படி மோசடி தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நீதி மன்றம் அவர்கள் மீது பிடியாணை பிறப்பித்தது .மேற்படி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர் R.ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.சண்முக வடிவு அவர்களின் தலைமையிலான போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண் 03/2005 U/S 406,420 r/w 34 IPC இல் 20 வருடமாக தேடப்பட்டு வந்த கொல்லங்கோடு காக்காவிளை பகுதியை சேர்ந்த பகீரதன் என்பவரது மகன் குசல குமார் (60), மற்றும் அவரது மனைவி சதிகுமாரி (59) ஆகியோரை திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர். குசலகுமார் கேரளாவில் தனது பெயரை கௌதம குமார் என்று மாற்றி 20 வருடமாக தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!