by satheesh on | 2026-01-03 06:21 PM
கேரளா; சபரிமலையில் தங்கத் திருட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பலரும் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, பல மாநிலங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது . நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் தங்கம் திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தங்கத் திருட்டு வழக்கு நடைபெறும் கொல்லம் நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவில் இருந்து தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட கதவு, சிலைகள் மட்டுமின்றி சன்னிதானத்தின் மேலும் பல இடங்களில் தங்கம் திருட்டு என்று எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!