by satheesh on | 2026-01-02 01:01 PM
அரசு நூலக கட்டட விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டச் சென்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ; கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்து டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கோரிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள், மக்களின் பங்களிப்புடன் நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கட்டடப் பணிகள் ஜன. 1ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். நேற்று நூலகம் அருகே உள்ள பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் மாரியப்பன், சுதாகர் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் சரவணன், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் அங்கு திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, இங்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை நாடுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் நூலக விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவோம் என தெரிவித்ததால், அதில் பங்கேற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!