by admin on | 2025-12-31 12:51 AM
திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் செய்தியாளர் சந்திப்பு. சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி அல்ல. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்துள்ளார். கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவரை சிறார் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ரயில் பயணத்தில் சாதாரணமாக சூரஜ் பார்த்ததை ‘முறைத்து சிரிக்கிறாயா?' என ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் நடந்துள்ளது. பட்டாக்கத்தியை சிறார்கள் அவர்களது வீட்டில் இருந்து எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது. வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டதாக பரவும் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!