by admin on | 2025-12-29 10:02 PM
தேனியில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு”பள்ளி , கல்லூரிகளில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பி.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் எதிர்கால சமுதாயமாக விளங்கக்கூடிய மாணவர் சமுதாயத்தினை ஒரு ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்கும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அறியாத சிறுவயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால்,அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், போதை எதிர்ப்புமன்றங்கள் (Anti Drug Clubs) ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு,தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மேலும், பள்ளிகளில் தினசரி காலையில் நடைபெறும் இறைவணக்கத்தில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். விடுதிகளிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அருகே, போதைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். மாணவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து, மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டால் அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனைத்து கல்வி நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசால் TN DRUG FREE APP மற்றும் TN FOOD SAFETY CONSUMER APP ஆகிய கைப்பேசி செயலிகள் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், போதைப்பொருட்கள் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேனி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்களுக்கான கையேட்டினை கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) திருமதி சசிதீபா மற்றும் கல்லூரி முதல்வர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!