by Vignesh Perumal on | 2025-12-29 09:32 PM
சிவகங்கை மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமான பிள்ளையார்பட்டியில், இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நகர முடியாமல் அணிவகுத்து நின்றதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.தற்போது விடுமுறை காலம் என்பதால், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலை முதலே வாகனங்களின் வருகை அதிகரித்த நிலையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாகனங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவானது.நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில் போக்குவரத்தைச் சீர்செய்ய ஒரு காவலர் கூட இல்லை என்பது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."இவ்வளவு பெரிய ஆன்மீகத் தலத்தில், அதுவும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து காவலர்கள் ஏன் பணியில் இல்லை?" எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காவல்துறை தூங்குகிறதா? அல்லது தெரிந்தே அலட்சியமாக இருக்கிறதா?" எனச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.குறுகிய சாலைகளில் பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்கள் என அனைத்தும் சிக்கிக் கொண்டதால், ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் கூடச் செல்ல முடியாத நிலை நிலவியது. வெயிலின் தாக்கம் மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பால் முதியவர்களும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களில் சீசன் காலங்களில் கூடுதல் போலீசாரைப் பணியமர்த்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. ஆனால், பிள்ளையார்பட்டி போன்ற ஒரு முக்கிய இடத்தில் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகள் இல்லாதது மாவட்ட காவல்துறையின் மெத்தனப் போக்கை வெளிப்படுத்துவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, பிள்ளையார்பட்டியில் போக்குவரத்தைச் சீர்செய்யவும், நிரந்தரமாக அங்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !