by Vignesh Perumal on | 2025-12-29 08:08 PM
திருப்பூர் தொழிலதிபரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்ததாக, ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் திமுக பிரமுகர் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்தச் சொத்து விவகாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில், ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கமலகோபி என்பவர் அந்தத் தொழிலதிபருக்கு உதவியாக இருந்துள்ளார்.இந்நிலையில், அந்தத் தொழிலதிபருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கமலகோபி தனது பெயருக்கு ஏமாற்றி மாற்றிக் கொண்டதாகவும், மேலும் தொழிலதிபர் அவரிடம் கொடுத்த பல கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் மோசடி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தொழிலதிபர் தரப்பிலிருந்து இன்று பெண் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 'தொழிலதிபர் வாங்கிய சொத்துக்களைத் திட்டமிட்டுத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஏமாற்றியுள்ளார்.மோசடி செய்த பணத்தைத் திரும்பக் கேட்டால், அரசியல் பலத்தைப் பயன்படுத்தித் தொழிலதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வாக்குள்ள நபர் என்பதால், காவல் துறையில் புகார் அளிக்க விடாமல் தடுத்து வருகிறார். திமுக ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் மீது, அதுவும் அமைச்சரின் கோட்டையாகக் கருதப்படும் ஆத்தூர் தொகுதியில் இவ்வளவு பெரிய தொகையில் மோசடிப் புகார் எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்குப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாரால், ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!