by satheesh on | 2025-12-29 08:06 PM
கன்னியாகுமரி ; நாகர்கோவில் பிரஸ் கிளப் 22-வது ஆண்டு விழா தோவாளையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊடகத் துறையின் வரலாற்றுப் பங்களிப்பையும், அதன் சமூகப் பொறுப்பையும் வலியுறுத்தினார். விழாவிற்கு பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார். தலைவர் மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் தாகூர், உறுப்பினர்கள் சுவாமிநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சிங்கப்பெண் விருதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிங்கம் விருதும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான பிரஸ் கிளப் டயரியும் வெளியிடப்பட்டது. மேலும், பேருரையாற்றிய நீதிபதி விக்டோரியா கெளரி பேசுகையில், போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு அரசு பள்ளிகளில் மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீதிமன்றத்தில் சிறு குழந்தைகள் குழந்தைகளுடன் வந்து நிற்பது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றும், அவை மாநில அளவில் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், பாலகங்காதர் திலகர் ‘கேசரி’ பத்திரிகையில் எழுதியதற்காக சிறையில் அடைக்கப்பட்டாலும், அவரது எழுத்து நாடு முழுவதும் பரவி சுதந்திர வேள்வியை மூட்டியது என நினைவூட்டினார். அதேபோல், மகாத்மா காந்தி ‘யங் இந்தியா’ பத்திரிகையின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு தீவிரம் அளித்ததாகக் கூறினார். ஊடகத் துறை ஒரு சேவை; லாபம் ஈட்டுவதற்கானது அல்ல என்று காந்தியே கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, ஒரு மாவட்டம், மாநிலம், தேசம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்றும், அந்தப் பொறுப்புணர்வோடு செயல்பட்டு வரும் செய்தியாளர்கள் மேலும் சிறந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!