by Vignesh Perumal on | 2025-12-29 10:36 AM
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லுக்குக் கடத்தி வந்து பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த வாலிபரைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும், திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முகமது இஸ்மாயில் அந்தச் சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மூளைச்சலவை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியைத் தனது ஊரான திண்டுக்கல்லுக்கு வருமாறு வற்புறுத்தி, அங்கிருந்து கடத்தி வந்துள்ளார்.சிறுமியைத் திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்த முகமது இஸ்மாயில், அங்கு வைத்துச் சிறுமிக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளான அந்தச் சிறுமி, இது குறித்துத் தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தங்கள் மகள் கடத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், உடனடியாகத் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் சரோஜினி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, முகமது இஸ்மாயில் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த முகமது இஸ்மாயில், தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காதல் என்ற பெயரில் சிறுமிகளைக் குறிவைத்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!