| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

வட்டி கட்டவே ரூ.62,000 கோடி...! தமிழக அரசு மீது அன்புமணி கடும் தாக்குதல்..!

by Vignesh Perumal on | 2025-12-28 11:43 AM

Share:


வட்டி கட்டவே ரூ.62,000 கோடி...! தமிழக அரசு மீது அன்புமணி கடும் தாக்குதல்..!

தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மற்றும் அதிக வட்டி செலுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறனை விமர்சித்தார். அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே முதலமைச்சருக்குத் தெரியவில்லை. அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறார். கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது."தமிழகத்தின் கடன் சுமை குறித்து அன்புமணி ராமதாஸ் அடுக்கிய புள்ளிவிவரங்கள் கூறியிருப்பதாவது : 2024-25 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ. 9,55,690 கோடியாக (சுமார் 9.55 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலேயே ஒரு மாநிலம் வாங்கியுள்ள அதிகபட்ச கடனாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் செலுத்தும் வட்டி மட்டும் ரூ. 62,456 கோடி. அதாவது, ஒரு மாதத்திற்குச் சுமார் 5,200 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து வெளியேறுகிறது.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவை விடத் தமிழகம் மோசமான நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்."மக்கள் தொகையில் நம்மை விட 3 மடங்கு பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கூட நம்மை விடக் குறைவான கடனையே வைத்துள்ளது. ஆனால், தமிழகம் கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதிலும் முதலிடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்."அரசு வாங்கும் கடனைப் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவோ அல்லது வருமானம் தரும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கோ பயன்படுத்தவில்லை. மாறாக, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்கும், ஊதியங்களுக்கும், வட்டி கட்டுவதற்குமே புதிய கடன்களை வாங்கி வருகிறார்கள். இது ஒரு மோசமான கடன் வலை'. இதனால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது" என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். தமிழக அரசு தனது நிதி மேலாண்மையைச் சீரமைக்கத் தவறினால், வரும் காலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தனது பேட்டியில் கவலை தெரிவித்தார



நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment