| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

பொங்கல் பரிசு..! அமைச்சர் ஆர்.காந்தி புதிய தகவல்...!

by Vignesh Perumal on | 2025-12-27 04:33 PM

Share:


பொங்கல் பரிசு..! அமைச்சர் ஆர்.காந்தி புதிய தகவல்...!

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 'பொங்கல் பரிசுத் தொகுப்பு' குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பின்வரும் பொருட்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனினும், அதன் தொகை எவ்வளவு என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2023 மற்றும் 2024-ல் ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இத்தொகை ரூ.2,000, ரூ.3,000 அல்லது ரூ.5,000 ஆக இருக்குமா என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடுத்த வாரமோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறுகையில், "தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன், விநியோகம் உடனடியாகத் தொடங்கும். வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும்," என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் "ரூ.5,000 வழங்கப்படுமா?" எனக் கேட்ட கேள்விக்கு, "அதெல்லாம் பிறகுதான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

வழக்கமான நடைமுறைப்படி, இந்த ஆண்டும் சில பிரிவினருக்கு ரொக்கப்பணம் வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் அறிவிப்பிற்காகத் தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment