| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

மறுவாழ்வு மையங்களில்...! ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் அதிரடி ஆய்வு..!

by Vignesh Perumal on | 2025-12-27 04:12 PM

Share:


மறுவாழ்வு மையங்களில்...! ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் அதிரடி ஆய்வு..!

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள சிவகிரிபட்டி மற்றும் புளியம்பட்டி இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையங்களில், மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் பி. வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் இன்று விரிவான கள ஆய்வினை மேற்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆணையர் ஆய்வு செய்தார்.

முதலமைச்சரின் மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய கான்கிரீட் வீடுகளின் தரத்தைப் பார்வையிட்டார். கட்டுமானப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடிக்கப்பட வேண்டும் எனப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மையங்களில் உள்ள குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார்.

முகாமில் வசிக்கும் மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை, ரேஷன் பொருட்கள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார்.

முகாம் குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் மையத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

ஆய்வின் போது, முகாம்களில் நிலுவையில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய்த் துறையினருக்கும் ஆணையர் உத்தரவிட்டார். குறிப்பாக, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், பழனி வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

மறுவாழ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதைக் கண்ட ஆணையர், பணிகளின் வேகம் குறித்து திருப்தி தெரிவித்தார். இந்த ஆய்வு முகாம் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.











செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல் 

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment