by satheesh on | 2025-12-26 02:52 PM
பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளில் பணத்தை திரும்ப பெற மத்திய ரிசர்வ் வங்கி வழிமுறைகளை வெளியிட்டது. ரிசர்வ் வங்கி வழிமுறைகள் வெளியீடு ; ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு எப்படி எடுப்பது என தெரியாமல் பலர் திண்டாடி வருகிறார்கள். தற்போது அந்த பழைய வங்கிக் கணக்குகளில் எடுக்கபடாமல் இருக்கும் பணத்தை எடுத்துவிட்டு, வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கு மத்தியரிசாவ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது. பணத்தை திரும்ப பெறலாம்! ரிசர்வ் வங்கி இதுகுறித்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளில், உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வங்கிக் கணக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுக ளாகச் செயல்படாமல் இருக்கலாம். ஒருவேளை அந்த வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட ஒரு தொகை எடுக்கப்படாமல் விடுபட்டிருந்தால், அந்த பணம் ரிசர்வ் வங்கியின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் வரவு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை திரும்பவும் கோரும் உரிமை உங்களுக்கு உள்ளது.அதற்கு முதலில், வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புத் தொகைகளைச் சரிபார்க்க https://udgam.rbi.org.ina சென்று உங்கள் விவரங்களை அளித்து உறுதி செய்து கொள்ளலாம்.*வட்டியுடன்...*பிறகு, கணக்கு வைத்திருந்த வங்கியின் எந்தக் கிளைக்கும் சென்று வங்கிக் கணக்கு வைத்தி ருந்தவரின் கேஓய்சியை சமர்ப்பிக்க வேண்டும். உரிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதற்கு ஆதார், பாஸ் போர்ட் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்கள் தேவைப்படும். கேஒய்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கணக்கில் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்ப பெறலாம் தகுதி வாய்ந்த வங்கிக் கணக்காக இருந்தால், அந்தத் தொகை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவையில்லை வங்கிக் கணக்கை நிரந்தரமாக முடிவிடத பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் கோரப்படாத வைப்புகளைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இந்த மாதம் 31-ந்தேதி வரை நடக்கின்றன. 2025-ம் ஆண்டில், வங்கிகளில் கோரப்படாமல் கிடக்கும் தொகை ரூ.1.54 லட்சம் கோடி எள மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பண மோசடி - பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் ! எஸ்பி அதிரடி !!
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!