| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

கஞ்சா வேட்டை..! இருவர் கைது..! 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்..!

by Vignesh Perumal on | 2025-12-26 12:29 PM

Share:


கஞ்சா வேட்டை..! இருவர் கைது..! 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிராகக் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாகர்கோவிலில் 1.25 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தீவிர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதற்காக மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்களின் மேற்பார்வையில், கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோட்டார் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுதன் @ நண்டு சுதன் (33) கோட்டார் கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மகன். ஜோனாப் அலி (46) அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உமர் அலி என்பவரது மகன்.

என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கோட்டார் போலீசார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் எஸ்பி டாக்டர் R. ஸ்டாலின் அவர்கள் எச்சரித்துள்ளார்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment