by Vignesh Perumal on | 2025-12-26 11:41 AM
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்ற பெரும் ஊழலான 'போலி பாஸ்போர்ட்' வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முகவர்கள் உட்பட 9 பேருக்குச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் பலருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ (CBI) அதிகாரிகள், சுமார் 22 பேருக்கு முறையற்ற வகையில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதை உறுதி செய்தனர்.
பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், காவல்துறை மற்றும் தபால் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து, முகவர்களுடன் கைகோர்த்து இந்தப் பெரும் முறைகேட்டைச் செய்தது விசாரணையில் அம்பலமானது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேல், குற்றம் சாட்டப்பட்ட 9 நபர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு தண்டனைகளை அறிவித்தார். மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை (தலா ரூ.80,000 அபராதம்), செல்வதுரை திண்டுக்கல் பேகம்பூர் தபால்காரர்.
சுரேஷ்பாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகப் பணியாளர். பக்ருதீன் கஞ்சா மற்றும் போலி பாஸ்போர்ட் முகவர். ஷாஜகான் போலி பாஸ்போர்ட் முகவர்.
மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை (தலா ரூ.70,000 அபராதம்), கீதாபாய் மதுரை மண்டல உதவி பாஸ்போர்ட் அதிகாரி. இப்ராஹிம் மீரான் போலி பாஸ்போர்ட் முகவர். சுனிதா பானு போலி பாஸ்போர்ட் முகவர். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை (தலா ரூ.40,000 அபராதம்). தங்கவேலு திண்டுக்கல் தெற்கு டவுன் காவல் ஆய்வாளர். அன்பழகன் பாஸ்போர்ட் அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாஸ்போர்ட் சரிபார்ப்புப் பணியைச் சரியாகச் செய்யாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி முகவரிகளுக்குத் துணையாக இருந்த காரணத்திற்காகக் காவல் ஆய்வாளர் தங்கவேலு மற்றும் தபால் ஊழியர்களுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய பாஸ்போர்ட் விவகாரத்தில் அரசு அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!