| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஜனவரி 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

by Vignesh Perumal on | 2025-12-25 05:56 PM

Share:


ஜனவரி 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 3-ம் தேதி (சனிக்கிழமை) கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிவார்கள். வரும் ஜனவரி 3-ம் தேதி சிகர நிகழ்ச்சியான 'ஆருத்ரா தரிசனம்' நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காகவும், விழாவில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதற்காகவும் ஜனவரி 3-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்தில் மாவட்டத்திலுள்ள வங்கிக் கிளைகள் மற்றும் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் அவசரப் பணிகளுக்காகச் செயல்படும்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசுத் தேர்வுகள் அல்லது முக்கிய நேர்காணல்கள் ஏதேனும் இருந்தால், அவை மாற்றமின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா தரிசன விழாவிற்காகக் காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment