by satheesh on | 2025-12-23 08:22 AM
கரூர் ; மாநகராட்சி பகுதியில் உள்ள தெற்கு காந்தி கிராமத்தில் பயணற்றுக் கிடந்த நீர் தேக்க தொட்டியை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக தொட்டி சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த வீடு பலத்த சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட வீட்டில் உரிமையாளர் மாநகராட்சியில் புகார் செய்யலாம் என்று சென்றிருக்கிறார். அப்போதுதான், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, குடி நீர்த்தொட்டி இடிந்து விழுந்த விஷயம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாது எனவும், மாநகராட்சி அனுமதி இல்லாமல் இந்த பணி நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர் சுதா இது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் மாநகராட்சி மீது நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாடா இருப்பதாக தகவல். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் / N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!
ரூ.3,000 லஞ்சம்...! பெண் அதிகாரி கையும் களவுமாக கைது..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு...! புதிய உச்சம்....!
முதல் பெண் சிஇஓ...! சரோஜினி பத்மநாதன் இன்று பொறுப்பேற்பு..!
எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...