| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

இளைஞர்கள் தங்களின் வளர்ச்சிக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படியுங்கள்...!!தேனி எம்பி அறிவுரை...

by admin on | 2025-12-21 07:50 PM

Share:


இளைஞர்கள் தங்களின் வளர்ச்சிக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படியுங்கள்...!!தேனி எம்பி அறிவுரை...


தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர்                                     திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (21.12.2025) மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும்  4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  தொடங்கி வைத்து,  புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளின் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும்,  அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காகவும் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில்              4-ஆவது புத்தகத் திருவிழா இன்று (21.12.2025) முதல் 28.12.2025 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.இவ்விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது,   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் உத்தரவுப்படி,    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  தேனி மாவட்டத்தில் 4-ஆவது  புத்தகத் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இப்புத்தகத்திருவிழா   நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவது மிகவும்   மகிழ்ச்சியளிக்கிறது.  


 புத்தக்திருவிழா நடைபெறவுள்ள 8 நாட்களும்  மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சிந்தனைமிக்க இலக்கிய அரங்கம் நடைபெறவுள்ளது.  இன்றைய தினம் செந்தில்கணேஷ்  ராஜலெட்சுமி அவர்களின்  கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை வழக்கறிஞர்  செல்வி மதிவதனி அவர்கள், மூன்றாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள், நான்காம் நிகழ்வில் பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள், ஐந்தாம் நிகழ்வில் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள், ஆறாம் நிகழ்வில் எழுத்தாளர் ஓசை காளிதாசன் அவர்கள், ஏழாம் நாள் நிகழ்வில் கலைமாமணி திரு.ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றம், நிறைவுநாள் நிகழ்வில் ஈரோடு மகேஷ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் என பல்வேறு ஆளுமைகளின் சிந்தனைமிக்க   நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளது.நமது முன்னாள் குடியரசுத்தலைவர்  மேதகு அப்துல்கலாம் அவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில்  பயின்றவர்.  படிப்பின்மீதும், புத்தக வாசிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆனார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களால் ஏற்படும் சுமையை குறைப்பதற்காக,  எடை குறைந்த  செயற்கைகால்களை  வடிவமைத்த மனிதநேய மிக்க பண்பாளர்.  அதுபோல இன்றைய இளைய தலைமுறையினர் வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளது.  இப்புத்தத் திருவிழா சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அருமையான முயற்சியாகும். இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, 4-ஆவது புத்தகத் திருவிழாவினை இப்பள்ளி மைதானத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய நாடார் சரஸ்வதி  பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

அதிக அளவு புத்தகங்களை வாசிப்பதன்  மூலம் அதிக அளவு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாமல், பிற அறிவுசார்ந்த புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இப்புத்தகத் திருவிழாவில்,  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான புத்தகங்கள் இக்கண்காட்சி இடம்பெற்றுள்ளது.  நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மின்னணு புத்தகங்கள் (e-Books) வரப்பெற்றாலும் , அனைவருக்கும் அதனை பயன்படுத்த முடிவதில்லை. எனவே, இத்தகைய வாய்ப்புகளை  பயன்படுத்தி புத்தக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், புத்தகத் திருவிழாவில் தொடக்கநாள் முதல் இறுதிநாள் வரை புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் நல்ஆளுமைகளின் சிறப்புரைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.  இன்றைய  மாணவர்கள்தான் எதிர்கால  இந்தியாவின் வளர்ச்சியாக கருதப்படுகிறார்கள்.  எனவே, மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள்  என அனைவரும் உங்களுடைய தேடலுக்கான சிறந்த  புத்தகங்களை அதிக அளவில் வாங்கி படித்து, அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.  


இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,  தேனி-அல்லிநகரம் நகர்மன்றத்தலைவர்  திருமதி ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் திரு.செல்வம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.முகமதுஅலி ஜின்னா, உதவி இயக்குநர் (தணிக்கை) திரு.அண்ணாதுரை, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன்,               செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இரா.நல்லதம்பி, மாவட்ட நூலக அலுவலர் திரு.சரவணக்குமார்,  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது,  தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி, நாடார் சரஸ்வதி நிர்வாக செயலாளர் திரு.ஆனந்தவேல் மற்றும்  hiஅனைத்து வட்டாட்சியர்கள்,  துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தி . முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர், 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment