| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்காக பேருந்து நிலையம் இட மாற்றம்....!!!! அதிமுக புகார்...!!!

by admin on | 2025-12-21 06:28 PM

Share:


ரியல் எஸ்டேட்  தொழில் வளர்ச்சிக்காக பேருந்து நிலையம்  இட மாற்றம்....!!!! அதிமுக புகார்...!!!

*கும்பகோணம் பேருந்து நிலைய இடமாற்றம்: மக்களின் வசதியா? எம்.எல்.ஏ-வின் ரியல் எஸ்டேட் லாபமா? அதிமுகவின் பிரம்மாண்டப் கண்டன ஆர்ப்பாட்டம்,* 


கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில், தற்போதைய பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. தசாப்தங்களாக நகரின் இதயப்பகுதியாக விளங்கும் பேருந்து நிலையத்தை, சுமார் 7 கி.மீ தொலைவில் சாக்கோட்டை அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்திற்கு இடம் மாற்றம் செய்யும்  கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏவின் முடிவைக் கண்டித்து, டிசம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே மிக பிரம்மாண்டமாக  தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



*வேளாண் மண்டலத்தில் ரியல் எஸ்டேட் அரசியல்*

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை விழுங்கும் 'ரியல் எஸ்டேட்' அரசியல்? கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற பல ஏக்கர் நஞ்சை நிலங்கள் கும்பகோணம் அருகே புறநகர் பகுதி கிருஷ்ணாபுரம் அருகில் அமைந்துள்ளன. தற்போது கும்பகோணம் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை அங்கே கொண்டு செல்வதன் மூலம், அந்தப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயரும் என்பதும், அங்கு வீட்டு மனைகள் (Layouts) அமைத்து லாபம் ஈட்டுவதே ஆளுங்கட்சியின் எம்,எல்,ஏ அன்பழகனுக்கு உண்மையான நோக்கம் என்பதும் அதிமுகவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. மேலும்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நஞ்சை நிலங்களை அழித்து, மக்கள் நலனை விட தனிநபர் லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பது வஞ்சகச் செயல்!" எனவும் விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் செயலாகவும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரின் முழக்கங்கள் எதிரொலித்தன.

மக்களைப் பாதிக்கும் முக்கியக் காரணங்கள்

 தூரமும் துயரமும்:  நகரின் மையத்தில் இருந்த பேருந்து நிலையம் 7 கி.மீ தொலைவிற்குச் செல்வதால், சாமானிய மக்கள் மற்றும் உள்ளூர் பயணிகள் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது மாநகரத்திலிருந்து புறநகர் பகுதியில் அமையப்போகும் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆட்டோ கட்டணம் 300 மற்றும் இதர வாகனங்களுக்குக் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல்  நஞ்சை நிலத்தை அழித்து பேருந்து நிலையம் அமைக்க காங்கிரட் கட்டுமானங்கள் செய்யப்படுவதன் மூலம் 

விவசாயப் பாதிப்பு ஏற்படுவதோடு அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பல ஏக்கர் காவிரி டெல்டா விவசாய நஞ்சை நிலத்தில் ரியல் எஸ்டேட் லாபத்திற்காக வருங்காலத்தில் சூறையாடப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதோடு காவிரி டெல்டாவின் செழுமையான விவசாய நிலங்கள் இந்தத் திட்டத்திற்காகப் பலியிடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்துள்ளது.


அதனை தொடர்ந்து தற்போதைய பேருந்து நிலையத்தைச் சுற்றி இயங்கி வரும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என தெரிய வருகிறது. முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  (மு) அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் முன்னிலை வகித்தார்.

மாநகரச் செயலாளர் இராம ராமநாதன், கலந்து கொண்டு புதிய பேருந்து  நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து பேசினார். நிகழ்வில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதிமீனா பி,எஸ்,சேகர், மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ. வி.கே. அசோக் குமார். மாவட்டக் கழக அவைத் தலைவர் க. தவமணி போன்ற முக்கிய நிர்வாகிகள் உட்பட மாவட்ட, ஒன்றிய வட்டக் கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்கள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு ஆளுங்கட்சி எம்எல்ஏ சாக்கோட்டை  அன்பழகனுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுப்பினர். "மக்களின் நலனை அடகு வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ய நினைத்தால், அதிமுக சும்மா இருக்காது" என எச்சரித்துள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் சாக்கோட்டை க.அன்பழகன் எம்,எல்,ஏ  இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமடையும் எனத் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த முடிவு, தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொது மக்களை அவதிக்கு உள்ளாக்கும் இந்த பேருந்து நிலைய திட்டம் குறித்து மறுபரிசலினை செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்தில் மேற்கொண்டு செயல்படுவாரா? என கும்பகோணம் தொகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.


T. Muthukkamatchi evidence editor. 9842337244


தஞ்சை மாவட்ட  நிருபர் அ, மகேஷ்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment