by Vignesh Perumal on | 2025-12-20 02:19 PM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டாம் படி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் செல்போன்கள் மூலம் வீடியோ அல்லது புகைப்படங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலையின் புனிதத்தைப் பேணிக் காக்கும் வகையில், கீழ்க்கண்ட இடங்களில் கேமராக்கள் மற்றும் செல்போன்களைப் பயன்படுத்தக் கேரளா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது பக்தர்கள் ஏறிச் செல்லும் புனிதமான 18 படிகள்.
சோபானம் கருவறைக்கு அருகிலுள்ள பகுதி. ஐயப்பன் சந்நிதானத்தின் முன்பகுதி. மாளிகைப்புறத்து அம்மன் கோயில் வளாகம்.
இந்தப் பகுதிகளில் பக்தர்கள் செல்போன்களைப் பயன்படுத்தி 'செல்பி' எடுப்பதோ அல்லது சமூக வலைதளங்களுக்காக வீடியோ (Reels) எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தரிசனம் செய்யும்போது புகைப்படம் எடுப்பது மற்ற பக்தர்களுக்கு இடையூறாக அமைவதோடு, சந்நிதானத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. இதனைத் தொடர்ந்து, கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்தத் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்துச் சந்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: பக்தர்கள் சந்நிதானத்திற்குள் நுழையும்போதே செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள். தடையை மீறி வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பவர்களின் செல்போன்கள் மற்றும் கேமராக்கள் பறிமுதல் செய்யப்படும். கோயில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புனிதமான சந்நிதானத்தின் மாண்பைக் காக்க வேண்டும் என்றும் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!