by Vignesh Perumal on | 2025-12-20 01:58 PM
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் இரண்டு வனச்சரகர்களைப் பணியிடம் மாற்றி மாவட்ட வன அலுவலர் (DFO) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தப் பணியிட மாற்றம் ஓராண்டு காலத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின்படி, கீழ்க்கண்டவாறு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக , பாஸ்கரன் சிறுமலை வனச்சரக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், திண்டுக்கல் வன விரிவாக்க மையத்திற்கு (Forest Extension Center) மாற்றப்பட்டுள்ளார்.
சுரேஷ் வன விரிவாக்க மையத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது சிறுமலை வனச்சரக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக அரசுத் துறைகளில் ஒரு பணியிடத்தில் குறைந்தபட்சம் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பிறகே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த அதிகாரிகள் இருவரும் தற்போதுள்ள பணியிடத்தில் அமர்ந்து ஓராண்டு கூட முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 19, 2025) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 20, 2025) காலையிலேயே இருவரும் தங்களின் புதிய பணியிடங்களுக்குச் சென்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல் வனத்துறையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்திற்கான முறையான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஓராண்டு முடிவதற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திடீர் இடமாற்றம், வனத்துறை ஊழியர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பண மோசடி - பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் ! எஸ்பி அதிரடி !!
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!