by Vignesh Perumal on | 2025-12-20 01:36 PM
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் பயங்கர உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக ஓடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்கள் நத்தம் சாலை வழியாகச் செல்கின்றன. இன்று காலை, குள்ளனம்பட்டி அருகே உள்ள ஒரு பகுதியில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, மிக அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலையில் தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் சாலை அரிப்பு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், பொன்னான குடிநீர் இப்படிச் சாலையில் வீணாவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"கடந்த சில மணி நேரங்களாகத் தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்ந்தால் பல வார்டுகளுக்குக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, உடைப்பைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்துத் தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், தண்ணீர் வெளியேறுவது இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. விரைவில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!