by Vignesh Perumal on | 2025-12-20 01:13 PM
கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குப் பண்டிகைக்கு முந்தைய நாளான வரும் டிசம்பர் 24-ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
உலகமெங்கும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அவர்கள் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், தேவாலயங்களில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் ஏதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும்.
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி: மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளான டிசம்பர் 24-ஆம் தேதியன்று, மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களைக் கொண்டு அவசரப் பணிகளுக்காகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் ஏதேனும் இருந்தால், அவை தடையின்றி நடைபெறும் என்றும் ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பண மோசடி - பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் ! எஸ்பி அதிரடி !!
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!