by Vignesh Perumal on | 2025-12-18 05:32 PM
திருப்பூர் மாநகராட்சி குப்பைகளைச் சின்னக்காளிபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 700 டன் குப்பைகளை, முறையான மேலாண்மை இன்றிப் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சின்னக்காளிபாளையம் மற்றும் இடுவாய் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு நிலத்தில் தற்காலிகமாகக் குப்பைகளைக் கொட்ட முடிவு செய்துள்ளது.
இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும், அருகில் செல்லும் பி.ஏ.பி. (PAP) வாய்க்கால் நீர் மாசடையும் என்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நீண்ட காலப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும், மக்களின் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தவும் அண்ணாமலை அவர்கள் இன்று சின்னக்காளிபாளையம் பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். "விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் இந்தத் திட்டத்தை மாநகராட்சி உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று அவர் முழக்கமிட்டார்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகளைப் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை கைது செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் திரண்டு வருவதால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது அறிவியல் ரீதியான குப்பை மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!