by satheesh on | 2025-12-18 01:41 PM
கன்னியாகுமரி ; களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கையால் மூடப்பட்ட நிலையில் செயல்படாமல் இருந்த கல்குவாரி,குமரியை சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில் சட்ட விரோதமாக பாறைகள் உடைப்பதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,கல் குவாரியில் அதிரடியாக நடத்திய சோதனையில் குவாரி மேற்பார்வையாளர் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவு. மேலும், கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்தப்படும் லாரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, லாரிகளை பறிமுதல் செய்தும் அபதாரம் விதித்தும், தீவிர சோதனையை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!