| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் நெகிழ்ச்சி சம்பவம்...! வைரல் வீடியோ..!

by Vignesh Perumal on | 2025-12-18 01:20 PM

Share:


கொடைக்கானலில் நெகிழ்ச்சி சம்பவம்...! வைரல் வீடியோ..!

விலங்குகளுக்கிடையேயான அன்பிற்கு மொழி கிடையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கொடைக்கானல் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறி வழிமாறிய மான் குட்டி ஒன்றிற்கு, பசு மாடு ஒன்று தன் கன்றுக்குட்டி என நினைத்துத் தாய் பாசம் காட்டிய நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறு மான் குட்டி ஒன்று, கூட்டத்தைப் பிரிந்து வழிமாறிச் சாலையோரப் புதரில் பதுங்கி நின்றது.

அப்போது அந்தச் சாலையோரம் புல் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, புதருக்குள் நின்றிருந்த மான் குட்டியைக் கண்டது. அந்த மான் குட்டியைத் தனது கன்றுக்குட்டி எனத் தவறாக எண்ணிய பசு மாடு, அதன் அருகே சென்று மிகுந்த வாஞ்சையுடன் மான் குட்டியை நாவால் வருடி கொடுத்தது.

சிறிது நேரம் பசுவின் அரவணைப்பில் இருந்த மான் குட்டி, அந்தப் பசு தனது தாய் இல்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டது. பின்னர் மெதுவாக அங்கிருந்து பின்வாங்கிய மான் குட்டி, மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிச் சென்றது.

இயற்கையின் விந்தையாகவும், விலங்குகளின் தூய்மையான அன்பிற்குச் சான்றாகவும் அமைந்த இந்த அரிய காட்சியை அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் "இயற்கையின் பேரன்பு" என்ற பெயரில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

வனவிலங்குகளும், வீட்டு விலங்குகளும் இவ்வளவு இணக்கமாகப் பழகும் காட்சி பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment